கனரகத் தொழில்கள் அமைச்சகம்
தொழில்துறையின் விரிவான மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்கிறது: மத்திய அமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 FEB 2022 3:18PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார் கூறியதாவது:
தொழில்துறையின் விரிவான மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மோட்டார் வாகனத்துறைக்கு உதவ கீழ்கண்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
இந்தியாவில் நவீன மோட்டார் வாகனத் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கவும், முதலீட்டை ஈர்க்கவும் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்காக 5 ஆண்டு காலத்துக்கு ரூ.25,938 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பேட்டரி விலையைக் குறைக்க நவீன ரசாயண பேட்டரியின் உற்பத்தித் திட்டத்துக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கவிப்புத் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு மே 12ம் அறிவித்தது. பேட்டரி விலைக் குறைப்பு, மின்சார வானகங்களின் விலை குறையவும், விற்பனை அதிகரிக்கவும் உதவும்.
பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களை ஒழிப்பதற்குத் தானாக முன்வந்து வாகனங்களை அழிக்கும் கொள்கையை அறிவித்தது. வாகனங்கள் விற்பனை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் மேம்பாட்டுச் சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது.
பஸ்போக்குவரத்தை அதிகரிப்பதற்கு 2021-22ம் ஆண்டு பட்ஜெட்டில் மொத்தம் ரூ.18,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796490
*******************
(வெளியீட்டு அடையாள எண்: 1796663)
வருகையாளர் எண்ணிக்கை : 167