இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav g20-india-2023

எச்&எஃப், பெயின் மற்றும் ஜிக்சி ஆகியவற்றால் நிர்வகிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படும் நிதியங்களால் அதீனாஹெல்த் குரூப் இன்க். வாங்கப்படுவதற்கு சிசிஐ ஒப்புதல்

Posted On: 08 FEB 2022 11:23AM by PIB Chennai

சிசிஐ என்று அழைக்கப்படும் இந்தியப்  போட்டியியல் ஆணையம், எச்&எஃப், பெயின்  மற்றும் ஜிக்சி ஆகியவற்றால் நிர்வகிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படும் நிதியங்களால் அதீனாஹெல்த் குரூப் இன்க். வாங்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

சிறப்பு நோக்க நிதியங்கள்  கையகப்படுத்துபவர்களால்  நிறுவப்பட்டுள்ளன. முதலீடு செய்யப்பட்ட மூலதனம் பெருகும் நோக்கத்துடன் நிதியை முதலீடு செய்வதே அவர்களின் முதன்மை வணிகச் செயல்பாடு ஆகும்.

 

அமெரிக்காவின் மசாசூசெட்ஸை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமான அத்தீனாஹெல்த் குழு இன்க், மருத்துவப் பதிவு, வருவாய் சுழற்சி, நோயாளி ஈடுபாடு, பராமரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள்தொகை சுகாதாரச்  சேவைகள் உள்ளிட்டவற்றில் கிளவுட் அடிப்படையிலான சேவை வழங்கும் நிறுவனமாகும் .

 

இது குறித்த இந்தியப்  போட்டியியல் ஆணையத்தின் விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796398

                                                                                                *********



(Release ID: 1796627) Visitor Counter : 260