சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் FAIRBANK'S என்னும் எலும்பு வளர்ச்சிக் குறைவு மற்றும் ACROMEGALY என்னும் அதிவளர்ச்சி நோய்கள் பாதிப்பு.

Posted On: 08 FEB 2022 12:40PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது:

 

எலும்பு வளர்ச்சிக் குறைவு  நோய் உள்ளவர்களுக்கு, வழக்கமாக வலி மேலாண்மை மற்றும் எலும்பியல் நடைமுறைகள் தேவை. இதற்கான வசதிகள் இந்திய மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. 

 அதேபோல், அக்ரோமெகாலி என்ற நோய் பிட்யூட்டரி சுரப்பியில் ஹார்மோன் அதிகளவில் சுரப்பதால் ஏற்படுகிறது. இந்த ஒழுங்கற்ற தன்மை, குழந்தை மற்றும் இளம் பருவத்தினர் இடையே ஏற்படும் போது உயரம் அதிகரிக்கிறது. இந்த நோய் உள்ளவர்கள் மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அல்லது மானிய கட்டணத்தில் சிகிச்சை பெறுகின்றனர். அக்ரோமெகாலி நோய்க்கு பயன்படுத்தப்படும் சமோடோஸடேடின் மருந்து தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியலில் உள்ளது. ஆகையால், இதற்கு நிலையான விலையை தேசிய மருந்து விலை ஆணையம் நிர்ணயித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கிலச்  செய்தி குறிப்பை காணவும்:

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796442

 

                                                                                *****************



(Release ID: 1796606) Visitor Counter : 208


Read this release in: English , Urdu , Bengali , Telugu