நிதி அமைச்சகம்

பிரதம மந்திரி விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் தொடர்பான முன்னேற்றம்

Posted On: 08 FEB 2022 1:34PM by PIB Chennai

உள்கட்டமைப்பு திட்டங்களின் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் வகையில் பிரதம மந்திரி விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்திற்கான திட்டங்களை அடையாளம் காணுவது, உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார அமைச்சகங்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இதனை மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி கூறியுள்ளார்.

  பிரதம மந்திரி விரைவு சக்தி பெருந் திட்டத்தின் கீழ் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சர் கூறியதாவது:-

  மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தரவுகள் தேசிய பெருந்திட்ட வலைதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

 அதிகாரம் வழங்கப்பட்ட செயலர்கள் குழு, கட்டமைப்பு திட்டமிடுதல் குழு, தொழில்நுட்ப ஆதரவு அலகு ஆகியவை  அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

பிரதம மந்திரி விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் குறித்த   17 அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சி ஆகியவை நிறைவடைந்துள்ளது. 5 மண்டல மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 அதிகாரம் அளிக்கப்பட்ட செயலர்கள் குழுவில், ரயில்வே அமைச்சகம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், எரிசக்தி அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், உரத்துறை, ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத்துறை, உருக்கு அமைச்சகம், வணிகத்துறை, நித்தி ஆயோக், சுற்றுலா அமைச்சகம் உள்ளிட்ட 22 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இடம் பெற்றுள்ளன.

***************



(Release ID: 1796536) Visitor Counter : 175