நிதி அமைச்சகம்
2020-21 நிதியாண்டுக்கான ரூ.3.50 லட்சம் கோடி என்ற பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ரூ.3.22 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
08 FEB 2022 1:37PM by PIB Chennai
2020-21 நிதியாண்டுக்கு பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் கோடி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ரூ.3.22 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிசன்ராவ் கரட் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் அரசு ஆண்டு தோறும் கடன் வழங்குவதற்கான இலக்கை நிர்ணயித்து வருவதாக கூறியுள்ள அமைச்சர் இதுவரை நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796455
***************
(रिलीज़ आईडी: 1796498)
आगंतुक पटल : 289