உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிராந்திய இணைப்பு - உதான் விமானங்கள் திட்டத்தின் கீழ் 86.05 லட்சம் விமானப் பயணிகள் பயணம்

Posted On: 07 FEB 2022 4:24PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

பிராந்திய விமான இணைப்பை ஊக்குவிக்கவும், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கவும் உதான் திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கியது.

இதுவரை, 65 விமான நிலையங்கள் மூலம் 403 வழித்தடங்கள்  (ஹெலிகாப்டர்கள், 2    நீர் விமான நிலையங்கள் உட்பட) செயல்பாட்டில் உள்ளன.

உதான் திட்டம் தொடங்கப்பட்டது முதல், கடந்த ஜனவரி 9ம் தேதி வரை, தோரயமாக 86.05 லட்சம் பயணிகள், உதான் திட்ட விமானங்களில் பயணித்துள்ளனர்.

இரண்டாம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் மக்களின் பயண முறைகளை உதான் மாற்றியமைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796156

***********


(Release ID: 1796317) Visitor Counter : 200