உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வான் விளையாட்டு திட்டத்தின் கீழ், விமான சாகசம்(ஏரோபாட்டிக்ஸ்), ஏரோ மாடலிங், விளையாட்டு போட்டிக்கான பரிசோதனை விமானம், பலூனில் பறப்பது, ட்ரோன் பறக்கவிடுவது, ஹேங் கிளைடிங் போன்ற வான் விளையாட்டுகள் ஊக்குவிக்கப்படவுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 07 FEB 2022 4:26PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் திரு. வி.கே.சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

நாட்டின் வான் விளையாட்டுக்களை ஊக்குவிக்க, தேசிய வான் விளையாட்டு கொள்கையை (NASP 2022), மத்திய அரசு தயாரித்துள்ளது.   இந்த வரைவு கொள்கை கடந்த ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்டது.  இது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை ஜனவரி 31ம்தேதி  வரை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த கருத்துக்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

தேசிய வான் விளையாட்டு கொள்கை வரைவுபடி, வான்விளையாட்டுக்களுக்கான உலகளாவிய மையமாக, இந்தியாவை  மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தற்சார்பு இந்தியா திட்டப்படி வான் விளையாட்டுக்களுக்கான சாதனங்களின் உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் தயாரிப்பு ஊக்குவிக்கப்படும்.

உலகளாவிய வான் விளையாட்டு போட்டிகளில், இந்தியர்களின் பங்களிப்பை அதிகரிக்க அரசு முயற்சிக்கும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை வான் விளையாட்டுக்களை பாடத்திட்டத்தில் சேர்க்க ஊக்குவிக்கப்படும்.

நாட்டில் வான் விளையாட்டுக்களை ஊக்குவிக்க 2021-22ம் ஆண்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேசிய வான் விளையாட்டு கொள்கை இறுதி செய்யப்பட்டவுடன், இந்திய வான் விளையாட்டுகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு தேவைக்கு ஏற்றபடி மத்திய அரசு நிதி வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796159

************


(வெளியீட்டு அடையாள எண்: 1796289) வருகையாளர் எண்ணிக்கை : 323
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Bengali