பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
கச்சா எண்ணெய் விலை ஏற்றம், இறக்கம் குறித்து எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் மற்றும் இதர சர்வதேச அமைப்பின் தலைவர்களிடம் இந்தியா கவலை
Posted On:
07 FEB 2022 4:01PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு. ராமேஷ்வர் தெலி கூறியதாவது:
இந்தியாவில் 2021ம் ஆண்டில் கச்சா எண்ணெய் தேவை நாள் ஒன்றுக்கு சுமார் 4.9 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது. இது 2045ம் ஆண்டில் 11 மில்லியன் பீப்பாய்களாக அதிகரிக்கும் என பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (ஒபெக்), தனது ‘வேர்ல்டு ஆயில் அவுட்லுக்’ என்ற இதழில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வழங்க, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் உள்நாட்டில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய நாடுகள், புதிய பகுதிகளில் இருந்து பெட்ராலியப் பொருட்களை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாரம்பரிய ஹைட்ரோ கார்பனை தாண்டி, எத்தனால், உயிரி எரிவாயு, ஹைட்ரஜன், எரிபொருளில் எத்தனால் கலப்பு திட்டம், மலிவான போக்குவரத்துக்கு நிலையான மாற்று எரிவாயு போன்ற திட்டங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம், இறக்கம் குறித்தும், வாடிக்கையாளர் நாடுகளுக்கு பொறுப்பான, நியாயமான விலையை நிர்ணயிப்பது குறித்தும், கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796150
***********
(Release ID: 1796273)