எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

प्रविष्टि तिथि: 07 FEB 2022 2:24PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய எஃகு அமைச்சர் திரு. ராம் சந்திர பிரசாத் சிங் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஊக்குவிப்பு  திட்டத்தின் மூலம் எஃகுத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நிதி உதவியை மத்திய எஃகு அமைச்சகம் வழங்குகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-

2021-22 (இது நாள் வரை) - ரூ 87.97 லட்சம்

2020-21 - ரூ 53.95 லட்சம்

2019-20 - ரூ 1500.00 லட்சம்

2018-19 - ரூ 1500.00 லட்சம்

2017-18 -  ரூ 1400.00 லட்சம்

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) மற்றும் ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் (RINL) ஆகியவை உலகளவில் கிடைக்கக்கூடிய சிறந்த தொழில்நுட்பங்களை (BAT) கையாளுகின்றன.

நவீனமயமாக்கல், விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப-பொருளாதார நடவடிக்கைகள் போன்றவை கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கின்றன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796110

 ***************

(Release ID: 1796110) 


(रिलीज़ आईडी: 1796188) आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Bengali