குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல்
प्रविष्टि तिथि:
06 FEB 2022 10:18AM by PIB Chennai
பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். ‘’இந்திய சினிமாவின் நைட்டிங்கேலின்’’ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திரு நாயுடு, ‘’ லதா அவர்களின் மறைவால், இந்தியா தனது குரலை இழந்து விட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தி வருமாறு;
‘’இந்திய சினிமாவின் நைட்டிங்கேல் ஆக திகழ்ந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவால் மிகவும் வேதனையடைந்துள்ளேன். லதா அவர்களின் மறைவால், இந்தியா தனது குரலை இழந்து விட்டது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இசை விரும்பிகளை தமது மெல்லிய, கம்பீரமான குரலால் பல தசாப்தங்களாக அவர் பரவசமடைய வைத்துள்ளார்’’
முழுமையான இரங்கல் செய்திக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795868
****
(रिलीज़ आईडी: 1795896)
आगंतुक पटल : 244