பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

தொழில்நுட்பம் சார்ந்த ஆளுகை, இனியும் ஒரு வாய்ப்பாகவே இருக்க முடியாது, அவசியம் தேவை; பிரதமர் மோடி ஆட்சியில், தொழில்நுட்ப புதுமைத் திட்டம், ஆட்சி முறையின் முத்திரையாக மாறியுள்ளது

Posted On: 04 FEB 2022 5:24PM by PIB Chennai

குடிமைப்பணி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு, பொதுச் சேவையில்  வெற்றிகரமாக பின்பற்றப்படும் புதுமைக் கண்டுபிடிப்புகளை அடையாளம் காண்பதற்காக, கர்மயோகி இயக்கத்தின் திறன் உருவாக்க ஆணையத்தின் ”பொது நிர்வாகத்தில் புதுமைக் கண்டுபிடிப்பு” என்ற திட்டத்தை,  மத்திய பணியாளர் நலத்துறை மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,  புதுதில்லியில் இன்று (4.2.2022) தொடங்கிவைத்தார்.   

நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வெற்றிகரமான புதுமைக் கண்டுபிடிப்புகளை அதிகரிக்க,  திறன் உருவாக்க ஆணையத்தால், அறிவுக் களஞ்சியம் உருவாக்கப்படும் என்றார்.  இந்த அறிவுக் களஞ்சியத்தில் உள்ள தகவல்களை, அனைவரும் அறிந்துகொள்ளும் வசதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   திறமையான ஆளுகைக்கு, வெற்றிகரமான புதுமைக் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஏதுவாக,  , புதுமை இணையதளம்,  3.1.மில்லியன் குடிமைப்பணி அதிகாரிகளும் பயன்படுத்தத்தக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  

https://innovateindia.mygov.in/cbc-inviting-innovations  என்ற இந்த இணையதளம்,  இன்று முதல் அடுத்தமாதம் 5-ந் தேதி வரை (4 பிப்ரவரி முதல் மார்ச் 5 வரை) திறந்திருக்கும் என்றும்,  அரசு ஊழியர்கள் அனைவரும்,  தங்களது வெற்றிகரமான கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று திறன் உருவாக்க ஆணையம் தெரிவித்துள்ளது.  

மேலும் விவரங்களுக்கு, ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795512

                                                      *******



(Release ID: 1795586) Visitor Counter : 162


Read this release in: English , Urdu , Hindi , Marathi