கனரகத் தொழில்கள் அமைச்சகம்
2022 பிப்ரவரி 1 வரை இந்திய மின்சார வாகன திட்டத்தின் 2-ம் கட்டத்தின் கீழ் 2,31,257 மின்சார வாகனங்களுக்கு கனரக தொழில்துறை உதவி அளித்துள்ளது
Posted On:
04 FEB 2022 4:10PM by PIB Chennai
2022 பிப்ரவரி 1 வரை ரூ.827 கோடி ஊக்கத் தொகை அளித்ததன் மூலம் இந்திய மின்சார வாகனங்களின் விரைவான ஏற்பு மற்றும் உற்பத்தியின் 2-ம் கட்டத்தின் கீழ் 2,31,257 மின்சார வாகனங்களுக்கு கனரகத் தொழில்துறை உதவி அளித்துள்ளது. 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டத்தின் கீழ் 65 நகரங்களுக்கு 6315 மின்சாரப் பேருந்துகளுக்கு கனரகத் தொழில்கள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 25 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 68 நகரங்களில் 2,877 மின்னேற்றம் செய்யும் நிலையங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2022 ஜனவரி 28 நிலவரப்படி 106 மின்சார வாகனங்களின் மாதிரிகளை உற்பத்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும் தென்னிந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தகவல்படி ஒவ்வொரு டிரக் வண்டிக்கும் 13 நபர்களும், ஒவ்வொரு காருக்கும் 6 நபர்களும், 3 சக்கர வாகனங்கள் ஒவ்வொன்றுக்கும் 4 நபர்களும், இருசக்கர வாகனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒருவரும் மோட்டார் வாகன தொழில்துறையில் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.
ஊக்கத் தொகையுடன் 7090 இ-பேருந்துகளுக்கும், 5 லட்சம் இ-3 சக்கர வாகனங்களுக்கும், இ-4 சக்கர வாகனங்களுக்கும், இ-2 சக்கர வாகனங்களுக்கும் உதவி அளிப்பது இந்திய மின்சார வாகனங்களின் விரைவான ஏற்பு மற்றும் உற்பத்தியின் 2-ம் கட்ட திட்டத்தின் நோக்கமாகும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கனரக தொழில்கள் துறை இணையமைச்சர் திரு கிருஷண் பால் குர்ஜார் இந்த தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795444
***************
(Release ID: 1795542)
Visitor Counter : 481