சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட படுக்கை வசதி மற்றும் கட்டமைப்பு வசதிகள்
प्रविष्टि तिथि:
04 FEB 2022 5:29PM by PIB Chennai
குறைந்தபட்சம் 45 படுக்கைவசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனைகள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிகிச்சையளிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள அவர், ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டங்களின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை, தேசிய சுகாதார ஆணையம் வகுத்துள்ள நெறிமுறைகளின்படி, குறைந்தபட்ச உள்-நோயாளி படுக்கை வசதி மற்றும் சாதனங்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் தயாரித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில், 2020-21ம் ஆண்டில் 1,733 பேருக்கும், 2021-22ம் ஆண்டில் 28,814 பேருக்கும் கோவிட்-19 சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2022 ஜனவரி மாத இறுதிவரை, நாடு முழுவதும் 22,874 பேருக்கு இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டதாக, போலியாக கணக்குக் காட்டப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் அதுபோன்ற முறைகேடு எதுவும் நடைபெறவில்லை எனவும் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795419
*******
(रिलीज़ आईडी: 1795532)
आगंतुक पटल : 228