உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
விமானிகள் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Posted On:
03 FEB 2022 5:28PM by PIB Chennai
நாட்டில் விமானிகள் பற்றாக்குறையைப் போக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையம், தாராளமயமாக்கப்பட்ட பறத்தல் பயிற்சி அமைப்பு கொள்கையை வகுத்துள்ளது. விமான நிலைய ராயல்டி என்னும் கருத்தியல் இதில் இடம் பெற்றுள்ளது.
பெலகாவி (கர்நாடகா), ஜல்கான் (மகாராஷ்டிரா), கலபுரகி (கர்நாடகா), கஜூராகோ (மத்தியப்பிரதேசம்) ஆகிய விமான நிலையங்களில் தலா இரண்டு பயிற்சி அமைப்புகளும், அசாமின் லிலாபரியில் ஒரு பயிற்சி முகாமும் அமைக்கப்பட்டுள்ளன.
விமான மேலாண்மை பொறியாளர்கள், விமானிகள் ஆகியோருக்கு ஆன்-லைன் தேர்வுகள் 2021 நவம்பர் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் மிகப் பெரிய பறத்தல் பயிற்சி அகாடமியான அமேதியில் உள்ள இந்திரா காந்தி ராஷ்டிரிய உடான் அகாடமி, மகாராஷ்டிராவின் கோண்டியா, கர்நாடகாவின் கலபுரகி ஆகிய இடங்களில் விமானி பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதித்துள்ளது.
2021-ல் இந்திய பறத்தல் பயிற்சி அமைப்புகள் 504 பேருக்கு பயிற்சி அளித்துள்ளன. இது 2019 கொவிட் பெருந்தொற்றுக்கு முன்பு இருந்ததை விட அதிகமாகும்.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் டாக்டர் வி.கே.சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795132
***
(Release ID: 1795165)
Visitor Counter : 177