பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஸ்வாதார் கிரெஹ் மற்றும் உஜ்ஜவாலா திட்டங்கள்
Posted On:
02 FEB 2022 5:04PM by PIB Chennai
பெண்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும், கடத்தப்பட்டவர்களை மீட்டு, மறுவாழ்வு அளிப்பதுடன், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக கடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களை மறு ஒருங்கிணைக்கவும் உஜ்ஜவாலா திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. நெருக்கடியான சூழலில் உள்ள பெண்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஸ்வாதார் கிரெஹ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்விரு திட்டங்களையும் மதிப்பீடு செய்த நித்தி ஆயோக், இவ்விரு திட்டங்களையும் ஒருங்கிணைப்பதோடு, அதில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைப்பதுடன் திட்ட அமலாக்கத்தில், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை அதிகளவில் பயன்படுத்தவும் பரிந்துரைத்தது. அதன்படி, இந்தத் திட்டங்கள் தற்போது மிஷன் ஷக்தி என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு, பெண்கள் சார்ந்த பிரச்சினைகளில் வாழ்க்கைச் சக்கர தொடர்ச்சி அணுகுமுறை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்குமிடம், உணவு, உடை, மனநல ஆலோசனை, மருத்துவ உதவி, சட்ட உதவி மற்றும் தொழிற்பயிற்சி அளித்து, அவர்களுக்கு, பொருளாதார மற்றும் உணர்வுப்பூர்வ மறுவாழ்வு அளிக்க, இரண்டு திட்டங்களிலும் வகை செய்யப்பட்டுள்ளது. மனநல ஆலோசனை மற்றும் தொழிற்பயிற்சி வழங்க, பயிற்சிபெற்ற பணியாளர்கள் மற்றும் நிபுனர்களைப் பணியமர்த்தவும் இத்திட்டத்தில் வழிவகை உள்ளது. அத்துடன், மறுவாழ்வு அளிக்கப்பட்ட பெண்களை மீண்டும் சமுதாயத்துடன் ஒன்றினைப்பதுடன், இத்திட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் கண்காணிக்கவும் வகை செய்யப்பட்டிருப்பதாக, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி இராணி, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1794862)
Visitor Counter : 431