பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அங்கன்வாடி சேவைகள்

Posted On: 02 FEB 2022 5:03PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக இன்று பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி கீழ்காணும் தகவல்களை தெரிவித்தார்.

அங்கன்வாடி சேவைகளின் கீழ் ஆறு சேவைகளின் தொகுப்பு, அதாவது, (i) துணை ஊட்டச்சத்து; (ii) முன்பள்ளி முறைசாரா கல்வி; (iii) ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி; (iv) நோய்த்தடுப்பு; (v) சுகாதார பரிசோதனை; மற்றும் (vi) பரிந்துரை சேவைகள், நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களின் மூலம் 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டில் 70374122 குழந்தைகள், 17186549

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என மொத்தம் 87560671 பேரும், 2019-20-ம் ஆண்டில் 68630173 குழந்தைகள், 16874975

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என மொத்தம் 85505148 பேரும், 2020-21-ம் ஆண்டில் 67509696 குழந்தைகள், 15673127

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என மொத்தம் 83182823 பேரும், 2020-21-ம் ஆண்டில் 2021 ஜூன் 30 வரை 73691025 குழந்தைகள், 16925928 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என மொத்தம் 90616953 பேரும் பயனடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794741

----


(Release ID: 1794858) Visitor Counter : 209


Read this release in: English , Urdu , Telugu