உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள்

Posted On: 02 FEB 2022 4:29PM by PIB Chennai

ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்யூனியன் பிரதேச அரசுகள் அளித்துள்ள தகவலின் படி, 2019-க்குப் பிறகு, பல்வேறு துறைகளின் மூலம், ஜம்மு & காஷ்மீரில் 1,41,815 புதியபணிகள் / திட்டங்களும், லடாக்கில் 17,556 திட்டங்களும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறதுஇரு யூனியன் பிரதேசங்களுக்கும் முறையே ரூ.27,274.00 கோடியும்ரூ.3,097.14 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது

கிராமப்புற மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைப் பொறுத்தவரை, ஜம்மு & காஷ்மீருக்கு ரூ.19,142.63 கோடியும், லடாக்கிற்கு ரூ.1,810.97 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் திரு.நித்யானந்த்ராய், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்

                                                          *****



(Release ID: 1794793) Visitor Counter : 142


Read this release in: English , Urdu , Punjabi