சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத்மாலா திட்டத்தின்கீழ் பொருளாதார பெருவழித்தடங்கள்

Posted On: 02 FEB 2022 3:40PM by PIB Chennai

நெடுஞ்சாலைகள் மற்றும் பல்வகை சரக்குப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான பாரத்மாலா திட்டத்தின் முதற்கட்டத்தில்,  9,000 கி.மீ. தூரத்திற்கு பொருளாதார பெருவழித்தடங்களை அமைக்க வகை செய்யப்பட்டுள்ளது.   இதில், 6,087 கி.மீ  நீளமுள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் / ஒப்பந்தப்பணி வழங்கப்பட்டிருப்பதுடன், எஞ்சிய தூரமுள்ள சாலைகளுக்கு அடுத்த 2 நிதியாண்டுகளில் அனுமதியளிக்க திட்டமிடப்பட்டுள்ளதுதற்போதுவரை, 1,613 கி.மீ பணிகள் முடிக்கப்பட்டு, எஞ்சிய தொலைவுக்கான பணிகளை 2026-27ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.  

***** 


(Release ID: 1794746) Visitor Counter : 210


Read this release in: English , Urdu , Marathi , Malayalam