இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
புதிய இந்தியா@100-ன் லட்சியங்கள் மற்றும் நம்பிக்கைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டமாக பட்ஜெட் அமைந்துள்ளது: திரு அனுராக் தாகூர்
Posted On:
01 FEB 2022 7:13PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு ரூ 3062.60 கோடியை மத்திய பட்ஜெட் 2022-23 ஒதுக்கியுள்ளது. பட்ஜெட் மதிப்பீடு 2021-22 உடன் ஒப்பிடும் போது இது 11.08 சதவீதம் (305.58 கோடி) அதிகமாகும்.
இந்திய இளைஞர்களின் முழு வளர்ச்சிக்கான இளைஞர் நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் முதன்மை திட்டமான ராஷ்ட்ரிய யுவ சஷக்திகரன் திட்டத்திற்கு முந்தைய ஆண்டை விட ரூ 29 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டு ரூ 138 கோடியைப் பெற்றுள்ளது.
நாட்டு நலப்பணி திட்டத்திற்கு ரூ 283.50 கோடி வழங்கப்பட்டுள்ளது, 2021-22-ல் இது ரூ 231 கோடியாக இருந்தது. தேசிய மாணவர் படைக்கு ரூ 75 கோடி வழங்கப்பட்டுள்ளது. முந்தயை ஆண்டை விட இது ரூ 18 கோடி அதிகமாகும்.
இந்தியாவில் அடிமட்ட அளவில் விளையாட்டை வளர்ப்பதற்கான முதன்மைத் திட்டமான கேலோ இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. இத்திட்டத்திற்கு முந்தைய பட்ஜெட் மதிப்பிட்டை விட 48.09% அதிகரிப்புடன் 974 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு & காஷ்மீரில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு ரூ 15 கோடியிலிருந்து ரூ 50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதிகளில் விளையாட்டு மேம்பாட்டுக்காக ரூ 330.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு இது ரூ 276.19 கோடியாக இருந்தது.
நாட்டிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி மற்றும் வசதிகளை வழங்குவதற்குப் பொறுப்பேற்றுள்ள விளையாட்டுத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு, 653 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கான நிதியுதவி ரூ 181 கோடியிலிருந்து ரூ 280 கோடியாக உயர்த்தப்படுவது, விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்கு விளையாட்டு மற்றும் விளையாட்டுக் கூட்டமைப்புத் துறைக்கு இடையே அதிக ஒத்துழைப்பை இது உறுதி செய்யும். வரவிருக்கும் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் தயாரிப்புக்கு இது மேலும் உதவும்.
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், “புதியஇந்தியா@100-ன் லட்சியங்கள் மற்றும் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதற்கான திட்டமாக பட்ஜெட் அமைந்துள்ளது,” என்றார்.
இது தவிர, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகாமை நாடாவுக்கு 2021-22 பட்ஜெட் மதிப்பீடான ரூ 10 கோடியுடன் ஒப்பிடுகையில், 2022-23-ல் ரூ 17 கோடி (பட்ஜெட் ஒதுக்கீட்டில் 70% அதிகரிப்பு) ஒதுக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை இது மேம்படுத்துவதோடு, இந்தியாவில் விளையாட்டுகளில் உலகத் தரத்தைப் பேணுவதற்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794496
*******
(Release ID: 1794517)
Visitor Counter : 215