நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் 26 கட்சிகளின் 38 தலைவர்கள் பங்கேற்பு : அவை சுமூகமாக நடைபெற வேண்டுகோள்

Posted On: 31 JAN 2022 7:57PM by PIB Chennai

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் அனைத்து  கட்சி தலைவர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனைக்  கூட்டத்தை காணொலி காட்சி மூலம் நடத்தியது.  துவக்க உரையில், அவை சுமூகமாக நடைபெற நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி வேண்டுகோள் விடுத்தார்.  பட்ஜெட் கூட்டத் தொடரில்  29 அமர்வுகள் இருக்கும் எனவும், முதல் கூட்டத்தில் 10 அமர்வுகளும், 2வது பகுதியில் 19 அமர்வுகளும் 68 நாட்கள் இடைவெளியில் நடைபெறும்  என்றும்  அவர் தெரிவித்தார்.  அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய திரு பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிப்பதாக அனைத்து கட்சி பிரதிநிதிகளும் ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தார்.  குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் மற்றும் மத்திய பட்ஜெட் விவாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.  மற்ற விஷயங்களை மார்ச் 14ம் தேதி தொடங்கும் 2வது கூட்டத் தொடரில் விவாதிக்கலாம் என அவர் கூறினார்.

 

இன்று தொடங்கி பட்ஜெட் கூட்டத் தொடர், 2022 ஏப்ரல் 8ம் தேதி முடிவடையும் என அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இடைவெளிக்காக 2022, பிப்ரவரி 11ம் தேதி ஒத்திவைக்கப்படும். அதன்பின் மார்ச் 14ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் மீண்டும் தொடரும். இந்த கூட்டத் தொடர் 2022 ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடையும் என அவர் தெரிவித்தார்.

2022-23ம் ஆண்டு மத்திய பட்ஜெட்  மக்களவையில் பிப்ரவரி 1ம் தேதி 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் எனவும்  அவர் தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத் தொடரில் 14 மசோதாக்கள் மற்றும் 6 நிதி மசோதாக்கள் உட்பட 20 மசோதாக்கள் தாக்கல் செய்யப்த் திட்டமிடப்பட்டுள்ளதாக திரு பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தின்போது ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றதற்காக அனைத்து கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தார்.

பா.ஜ, காங்கிரஸ், திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உட்பட 26 கட்சிகளைச் சேர்ந்த 38 தலைவர்கள் இந்தக்  கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1793884&RegID=3&LID=1

                                                                                ***********************

 



(Release ID: 1793987) Visitor Counter : 240


Read this release in: English , Urdu , Hindi , Punjabi