நிதி அமைச்சகம்

பொருளாதார வளர்ச்சி மற்றும் நடவடிக்கையை கண்காணிக்க புவி இருப்பிடத் தரவு மற்றும் வரைபடவியல் (கார்டோகிராபிக்) தொழில்நுட்பங்கள் முக்கியமானவையாக உள்ளன : பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

Posted On: 31 JAN 2022 3:08PM by PIB Chennai

பொருளாதார நடவடிக்கை மற்றும் வளர்ச்சியைக்  கண்காணிப்பில் புதிய வரைபடவியல் தரவுகள் மற்றும் தகவல்கள் இந்தாண்டில் முக்கிய கருப்பொருளாக உள்ளன என 2021-22ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலப்  பொருளாதார வளர்ச்சியைக்  கண்காணிக்கவும், ஒப்பிடவும் புவி இருப்படி(ஜியோஸ்பேஷியல்) தரவு மற்றும் வடைபடவியல் தொழில்நுட்படங்கை பயன்படுத்த முடியும் என பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

செயற்கைகோள்கள், டிரோன்கள், செல்போன்கள் மற்றும் இதர வழிகளில் பெறப்படும் தகவல்கள் வரைபடவியல் தொழில்நுட்பத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மக்கள் நலனுக்காக இந்த தரவுகளை சிறப்பாக பயன்படுத்த முடிகிறது.

சில புவி இருப்பிடத்  தகவல்களை சுவாரஸ்யமான முறையில்  பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

 

1. 2012 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கு இடையே இரவு நேர வெளிச்சம் பற்றிய ஒப்பீடு

 இது மின்விநியோகத்தின் விரிவாக்கம், புவியியல் அடிப்படையில் மக்கள் தொகை மற்றும் பொருளாதார நடவடிக்கை, நகர்ப்புற விரிவாக்கம், நகர்புறங்கள் இடையேயான வளர்ச்சி ஆகியவற்றை  சுவாரஸ்யமாக தெரிவிக்கிறது.

2, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்

இந்தியாவின் தேசிய நெடுங்சாலை கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் 71,772 கி.மீட்டராக இருந்தது. இது 2021 ஆகஸ்ட் மாதத்தில் 1,40,152 கி.மீட்டராக அதிகரித்துள்ளது.

3. 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கு இடையே இந்தியாவில் விமான நிலையங்களின் செயல்பாட்டில்  ஒப்பீடு

2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 62 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருந்தன. 2021 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

4. 2011 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கு இடையே மெட்ரோ ரயில் பாதை ஒப்பீடு: 

பொருளாதா நடவடிக்கை மற்றும் வளர்ச்சியைக்  கண்காணிக்க பல நகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் நெட்வொர்க்கையும் பொருளாதார ஆய்வறிக்கை ஆய்வு செய்கிறது.

தில்லி மெட்ரோ ரயில் நெட்வொர்க் கடந்த 2011ம் ஆண்டில் 145 நிலையங்கள் 196.35 கி.மீ தூரம் என்ற அளவில் இருந்தன.  இது 2021 டிசம்பரில் 286 ரயில் நிலையங்கள், 390.14 கி.மீ தூர ரயில் பாதையாக அதிகரித்துள்ளது.

பெங்களூர் மெட்ரோ ரயில் நெட்வொர்க் கடந்த 2011ம் ஆண்டில் 6 நிலையங்களாக 6.7 கி.மீ தூரத்துக்கு இருந்தது. இது 2021 டிசம்பரில் 52 ரயில் நிலையங்களாக 56.2 கி.மீ தூரத்துக்கு அதிகரித்துள்ளது.

ஆண்டு தண்ணீர் சேகரிப்பு, பல நகரங்களில் மக்கள் தொகை அடர்வு, காரிப் கால பயிர்கள், தரிசு நில மேம்பாடு உட்பட பல துறைகளில் செயற்கை கோள்கள் படத்தைப்  பயன்பத்திப்  பெறப்படும் தகவல்கள் பொருளதார நடவடிக்கை மற்றும் மேம்பாட்டைக்  கண்காணிக்கப்  பயன்படுத்தப்படுகின்றன என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

***************



(Release ID: 1793904) Visitor Counter : 316