சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 தயார்நிலை மற்றும் தடுப்பூசி முன்னேற்றம் குறித்து 5 கிழக்கு மாநிலங்களுடன் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு

Posted On: 29 JAN 2022 6:25PM by PIB Chennai

கோவிட்டுக்கு எதிரான போராட்டம், மத்திய மாநில அரசுகளின் கூட்டு முயற்சி மற்றும் பொறுப்பு என்றும், இந்தச்  சவாலை நாம் கூட்டாகச்  சந்தித்தோம்’’ என 5 கிழக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

 

ஒடிசா, பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மைச்  செயலாளர்களுடன் கோவிட் தயார் நிலை குறித்து மத்திய சுகதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் , நித்தி ஆயோக் சுகாதார உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆகியோர் உடன் இருந்தனர். 

 

கோவிட் தொற்று மாறுபாடுகள் ஏற்பட்டாலும், ‘பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை ஆகிய யுக்திகளை கோவிட்  மேலாண்மைக்குப்  பின்பற்ற வேண்டும் என டாக்டர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.  இந்த மாநிலங்களில் கடந்த 2 வாரங்களில், தொற்றுப்  பாதிப்புக்  குறைந்தாலும், நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.  தொற்றுப்  பாதிப்பை தினசரி கண்காணிக்க வேண்டும் எனவும், ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பு  எண்ணிக்கையைக்  கண்காணிக்க வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டன. தடுப்பூசி செலுத்தியவர்கள், தடுப்பூசி செலுத்தாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்கள், இறப்புகள், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களின் விகிதங்களை ஆராய்வதும் முக்கியம் என அவர் தெரிவித்தார்.

 

கொவிட் அவசரகால நிதியை அனைத்து மாநிலங்களும் முழுமையாகப்  பயன்படுத்த வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

தடுப்பூசி நடவடிக்கையைத்  தீவிரபடுத்த வேண்டும் எனவும், ஆக்ஸிஜன் ஆலைகளை விரைவில் நிறுவ வேண்டும் எனவும், தொலை தூர மருத்துவச்  சிகிச்சை வசதிகளைப்  பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், இந்திய மருத்துவக்  கவுன்சில் தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பர்க்கவா உட்பட பலர் இந்தக்  கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்தி குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793520

                                                                                                ****************



(Release ID: 1793533) Visitor Counter : 248