நிதி அமைச்சகம்
ரூ 491 கோடி போலி உள்ளீட்டு வரிக் கடன் ரசீதுகளை வழங்கிய 93 போலி நிறுவனங்களின் சட்ட விரோத கூட்டை அதிகாரிகள் முறியடித்து, ஒருவரைக் கைது செய்தனர்
Posted On:
28 JAN 2022 5:45PM by PIB Chennai
போலி ஆவணங்களின் வாயிலாக பல போலி நிறுவனங்களை நடத்தி ரூ 491 கோடி உள்ளீட்டு வரிக் கடன் மோசடி செய்ததற்காக ஒரு நபரை ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகத்தின் குருகிராம் மண்டலப் பிரிவு 18.01.2022 அன்று கைது செய்தது.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நபர்களுக்கு தொலைதூர இடங்களிலிருந்து தங்கள் வேலையைச் செய்வதற்கும், தரவைச் சேமிப்பதற்கும் கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை ஒருவர் வழங்குகிறார் என்று ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகத்தின் ஜெய்ப்பூர் மண்டலப் பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் கிளவுட் சேவை வழங்குநரிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட வன்தகடு -ஹார்ட் டிஸ்க்- ஆய்வு செய்யப்பட்டது.
அதில் உள்ள தரவுகளை ஆய்வு செய்ததன் மூலம், 93 போலி நிறுவனங்களின் இணைப்பாளராகச் செயல்பட்ட முக்கிய நபர் அடையாளம் வெளிப்பட்டது.
18.01.2022 அன்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கொடுக்கப்பட்ட முகவரிகளில் பல்வேறு நிறுவனங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. மேற்கூறிய நிறுவனங்களை நடத்தி வந்த முக்கிய செயல்பாட்டாளர் ஹரியானாவில் உள்ள ஹன்சியில் கைது செய்யப்பட்டார்.
மற்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து மோசடி செய்ததை விசாரணையின் போது அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1793299
***********************
(Release ID: 1793382)
Visitor Counter : 155