நிதி அமைச்சகம்
தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் வி.ஆனந்த நாகேஸ்வரன் நியமனம்
Posted On:
28 JAN 2022 6:16PM by PIB Chennai
தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் வி. ஆனந்த நாகேஸ்வரனை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன், டாக்டர் வி. ஆனந்த நாகேஸ்வரன் எழுத்தாளராகவம், ஆசிரியராகவம், ஆலாசகராகவும் பணியாற்றினார். இவர் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள தொழில் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை நிறுவனங்களில் கற்பித்துள்ளார். ஏராளமான புத்தகங்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
ஐஎப்எம்ஆர் ஸ்கூல் ஆப் பிசினஸ் தலைவராகவும் , க்ரேயா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலில் இவர் பகுதி நேர உறுப்பினராக 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை இருந்து வந்தார். அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் லேலாண்மை படிப்பில் முதுநிலை டிப்ளமோ படித்த இவர், மாசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
******************
(Release ID: 1793373)
Visitor Counter : 484