இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

தேசிய போர் நினைவுச் சின்னத்தை விளையாட்டு வீரர் ஷரத் குமார் பார்வையிட்டார்

Posted On: 28 JAN 2022 3:49PM by PIB Chennai

பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற உயரம் தாண்டுதல் வீரர் ஷரத் குமார் தேசிய போர் நினைவுச் சின்னத்திற்கு இன்று சென்று பார்வையிட்டார். 1961 ஆம் ஆண்டில் காங்கோவுக்கு ஐ.நா. அமைதி காக்கும் படையில் இடம் பெற்ற முதலாவது கூர்கா ரைபிள்ஸ் பட்டாலினை நிறுவி பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியாவுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

டார்ஜிலிங்கில் தனது பள்ளிக்காலம் குறித்து குறிப்பிட்ட ஷரத், கூர்கா படைப்பிரிவின் தீரம் குறித்த கதைகளைக் கேட்டதை சுட்டிக்காட்டினார். பிரிட்டிஷ் இந்தியா ராணுவத்தில் பணியாற்றிய 10 கூர்கா படைப்பிரிவில் 6 இந்திய ராணுவத்திற்கு மாற்றப்பட்டதையும் மற்றவை பிரிட்டிஷ் ராணுவத்துடன் இன்னும் நீடிப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

போர் நினைவுச் சின்னத்தை சுற்றிப் பார்த்த அவர், நெக்ஸ்ட் ஆப் கின் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

 

*******



(Release ID: 1793305) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Hindi , Punjabi