ஜல்சக்தி அமைச்சகம்

திறந்தவெளி கழிப்பிட அகற்றல் நடவடிக்கைகளுடன், கழிவுநீர் மேலாண்மைக்கும் ஹரியானா நடவடிக்கை

Posted On: 27 JAN 2022 5:36PM by PIB Chennai

ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஷிர்ஷி கிராமத்தில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெருக்களில் வழிந்தோடித்  தேங்கி கிடந்தது. இதனால் துர்நாற்றம், கொசு உற்பத்தி போன்ற பிரச்னைகள் நிலவியது. இங்குள்ள 360 வீடுகளில் 2,400 பேர் வசிக்கின்றனர்.

கழிவுநீர் பிரச்னைக்குத்  தீர்வு காண இங்கு கழிவுநீர் நிலைப்படுத்துதல்  குட்டை ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இந்த குட்டை கழிவுநீர் பிரச்னைக்குத்  தீர்வு கண்டதுடன், மீன்வளர்ப்புக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் கிராம பஞ்சாயத்து ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வருவாய் ஈட்டவும் வழி ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த குட்டை கிராம மக்களின் பொழுது போக்கு இடமாகவும் மாறியுள்ளது.

கழிவு நீர் நிலைப்படுத்துதல் குட்டையில், பல குழிகள் அமைக்கப்பட்டு கழிவு நீர் இயற்கையான முறையில் சுத்திகரிக்கப்படுகிறது

பித்தோரிட் ஆலை: குருகிராம் மாவட்டத்தில் தோர்க்கா கிராமத்தில் பித்தோரிட் என்ற கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை கடந்த 2019ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கும் இயற்கையான முறையில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.

 

கழிவுநீர் குழிகள்: ஹரியானாவின் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள டோங்லி கிராமத்தில், 224 வீடுகள் உள்ளன. இங்கு 3 முதல் 6 வீடுகள் வரையிலான தொகுப்புகளின் கழிவுநீர்கள் மூடப்பட்ட வாய்க்கால் மூலம் தொட்டிகளுடன்  இணைக்கப்பட்டு கழிவுநீர் மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறாக, திறந்தவெளிக்  கழிப்பிடம் இல்லா நடவடிக்கைகளுடன் கழிவுநீர் மேலாண்மை நடவடிக்கைகளும் ஹரியானாவில் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792984

---



(Release ID: 1793021) Visitor Counter : 191


Read this release in: English , Urdu , Hindi , Punjabi