பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
புதிதாக அறிவிக்கப்பட்ட சிசிஎஸ் (ஓய்வூதிய) விதிகள், 2021 மற்றும் முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்கள் உருவாக்குவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இணையவழி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது
प्रविष्टि तिथि:
26 JAN 2022 3:11PM by PIB Chennai
புதிதாக அறிவிக்கப்பட்ட சிசிஎஸ் (ஓய்வூதிய) விதிகள், 2021 மற்றும் முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்கள் உருவாக்குவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை செயலாளர் திரு வி ஸ்ரீநிவாஸ் தலைமையில் அனைத்து ஓய்வூதியர் சங்கங்களுக்கு இணையவழி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மத்திய அரசு ஓய்வூதியர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு அமர்வுக்குப் பிறகும் வினா விடை அமர்வு இடம்பெற்றது.
பல்வேறு சங்கங்களில் இருந்து 52 பிரதிநிதிகள் பங்கேற்றிருப்பதற்கும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றதற்கும் செயலாளர் மகிழ்ச்சி தெரிவித்தார். விவாதத்தின் ஆழம் மற்றும் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகள் குறித்து அவர் பாராட்டு தெரிவித்தார். ஓய்வூதியதாரர்களிடையே உள்ள ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கு இத்தகைய கலந்துரையாடல்கள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு சங்கமும் தங்களின் உறுப்பினர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஓய்வூதியத் துறை என்பது சட்ட ரீதியானது, கொள்கை அடிப்படையிலானது என்று தெரிவித்த அவர், சீர்திருத்தங்கள் தேவைப்படுவதையும் தொடர்ச்சியாக அண்மைத் தகவல்களை அறிந்து கொள்வதும் முக்கியம் என்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல பயன்களை உறுதி செய்ய சட்டத்தில் திருத்தங்கள் தேவைப்படலாம் என்றும் கூறினார். இந்த நடைமுறைகளின் நோக்கம் இதுதான் என்று அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு சங்கத்திலும் 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர் சங்கத்தினர் தங்களின் உறுப்பினர்களுடன் தொடர்ந்து கலந்துரையாட வேண்டும் என்று கூறினார்.
***
(रिलीज़ आईडी: 1792840)
आगंतुक पटल : 313