விவசாயத்துறை அமைச்சகம்

தேனீ வளர்ப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு

Posted On: 25 JAN 2022 4:15PM by PIB Chennai

தேனீ வளர்ப்பு குறித்த தேசியக் கருத்தரங்கை, தேசிய தேனீ வாரியம், தேசிய வோளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு(டிரைபட்), தேசிய பால் வளர்ச்சிவாரியம் ஆகியவற்றுடன் இணைந்து நேற்று நடத்தியது. இதில் அரசு மற்றும் தனியார் துறை, மாநில, மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள், தேனி வளர்ப்போர் உட்பட 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கில் மத்திய வேளாண் அமைச்சக கூடுதல் செயலாளர் டாக்டர் அபிலாக்ஷ் லிகி, மத்திய அரசு தொடங்கிய தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் திட்டம் குறித்து பேசினார். இத்திட்டத்தின் அமலாக்கம், நாட்டில் இனிப்புப்  புரட்சியை ஏற்படுத்துவதில் மிகப் பெரிய நடவடிக்கை என்றார்.

தேனில் கலப்படம் செய்யும் பிரச்னைக்குத் தீர்வு காண தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன்திட்டம் உதவும் என திரு லிகி தெரிவித்தார். தேன் மற்றும் தேன் கூடுகள் தயாரிப்புகளை அடையாளம் காண மதுகிரந்தி இணையளத்தை தேசிய தேனீ வாரியம் தொடங்கியுள்ளதுநாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேன் பரிசோதனை கூடங்களை அமைக்க தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் திட்டம், திட்டமிட்டுள்ளது. தேனீ வளர்ப்போரின் 100 விவசாய உற்பத்தி மையங்களில் இந்தப்  பரிசோதனைக்  கூடங்கள் அமைக்கப்படும்தேனீ வளர்ப்போருக்கான விவசாய உற்பத்திச் சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றை அமைப்பது தேனீ வளர்ப்புத்துறையை நிலையாகச்  செயல்பட வைக்கும் என  டாக்டர் அபிலாக்ஷ் லிகி கூறினார்.

தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் என்.கே.பாட்லே பேசுகையில், தேசியத்  தேனீ வளர்ப்பு மற்றும் தேன் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தி, தேனீ வளர்ப்போருக்கு உண்மையான பயன்களை அளிக்க வேண்டும் எனக்  கூறினார்தேனீ வளர்ப்போரின் வருமானத்தை அதிகரிக்க, தேன் உற்பத்தியுடன், இதர தயாரிப்புகளான ராயல் ஜெல்லி, தேனீ மகரந்தம், தேனீ மெழுகு, தேனீ விஷம், தேன்கூடு எண்ணெய் ஆகியவற்றையும் உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, இந்த கருத்தரங்கில் பங்கேற்ற நிபுணர்கள் பதில் அளித்தனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792508

----



(Release ID: 1792546) Visitor Counter : 311