குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
73-வது குடியரசு தின விழாவையொட்டி குடியரசு துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
Posted On:
25 JAN 2022 3:25PM by PIB Chennai
73-வது குடியரசு தின விழாவையொட்டி குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம்:
“மகிழ்ச்சியான 73-வது குடியரசு தினத்தன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது அரசியலமைப்புச் சட்டம் வழிகாட்டும் விளக்காகவும், நெறிமுறையின் திசைகாட்டியாகவும் விளங்குகிறது. சிறந்த அடித்தளத்தை இது அமைத்துள்ளது, இதன் மீது நமது மகத்தான தேசம் கட்டமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. நமது அரசியல் சட்டத்தின் மணிமகுடமாக விளங்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அனைவருக்கும் நீதி என்ற சிறந்த கோட்பாடுகளை நமது நம்பிக்கையை மறுஉறுதி செய்வதற்கு பொருத்தமான விழாவாக குடியரசு தினம் திகழ்கிறது. இந்த மகத்தான குடியரசு பிறப்பதற்கு வழிவகுத்த விடுதலைப் போராட்ட வீரர்களின் தன்னலமற்ற தியாகங்களை மிகுந்த நன்றியுடன் நினைவுகூரும் விழாவாகவும் இது உள்ளது.
மகிழ்ச்சியான இந்த நாளில் நமது குடியரசின் சாதனைகளை நாம் கொண்டாடுவோம். அமைதியான, இணக்கமான, முன்னேற்றம் நிறைந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி ஏற்போம்.
ஜெய் ஹிந்த்!”.
***************
(Release ID: 1792529)
Visitor Counter : 224