கலாசாரத்துறை அமைச்சகம்
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதற்காக விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் கோலத் திருவிழாவை கலாச்சார அமைச்சகம் நடத்தியது
प्रविष्टि तिथि:
24 JAN 2022 6:41PM by PIB Chennai
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை நாடு கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ‘உமாங் ரங்கோலி உத்சவ்’ எனும் வண்ணமிகு கோல நிகழ்ச்சிக்கு 24 ஜனவரி 2022 அன்று கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்தது.
இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் என்பதால், அதை குறிக்கும் வகையில் கோலத் திருவிழாவை கலாச்சார அமைச்சகம் நடத்தியது. பெண் சுதந்திரப் போராளிகள் அல்லது நாட்டின் முன்மாதிரி பெண்களின் பெயர்களை தாங்கியுள்ள சாலைகள் மற்றும் சதுக்கங்களில் ரங்கோலி அலங்காரங்களை பங்கேற்பாளர்கள் வரைந்தனர்.
19 மாநிலங்களில் உள்ள 70-க்கும் மேற்பட்ட இடங்களில் ரங்கோலி அலங்காரங்கள் செய்யப்பட்டன. முற்போக்கான இந்தியாவின் பயணத்தில் பெண்களின் பங்களிப்பைப் பாராட்டுவதற்காக ‘பெண் குழந்தைகள் தினம்’ மற்றும் ‘விடுதலையின் அமிர்தப் பெருவிழா’ ஆகியவற்றை இந்த நிகழ்வு ஒன்றாகக் கொண்டாடியது.
சுதந்திர இந்தியாவை அடைய போராடிய விடுதலை வீரர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளின் மாணவர்களும் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792236
************
(रिलीज़ आईडी: 1792297)
आगंतुक पटल : 318