குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெற்றிக் கதை- என்எஸ்ஐசியின் ஒற்றைப் புள்ளிப் பதிவுத் திட்டம் திரைப்பட இயக்குநரின் கனவுகளை அடைவதற்கு உதவியது

Posted On: 24 JAN 2022 4:55PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் திரு தேவாஷிஷ் பிரமோத் குமார். தேசிய சிறு தொழில்கள் வாரியத்தின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சக ஒற்றைப் புள்ளிப் பதிவு முறையின் மூலம் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற தனது இலக்கை அவர் நெருங்கிவிட்டார்.

#Noidaexpo-வில் பங்கேற்ற அவர், அமைச்சகத்தின் திட்டங்களைப் பற்றி அங்கு அறிந்து கொண்டதோடு, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தில் டிரஸ்ட் மீடியா என்டர்டெயின்மென்ட் என்ற தனது நிறுவனத்தை பதிவு செய்தார்.

தேவஷிஷின் தொழில் முனைவோர் பயணத்தில் அமைச்சகம் முக்கிய பங்கு வகித்தது. “#NSIC-ன் ஒற்றை புள்ளி பதிவு திட்டம் பற்றி என்னிடம் விளக்கப்பட்டது. இந்த திட்டத்தின் காரணமாக, எனது நிறுவனத்தால் டெண்டர்களை தாக்கல் செய்ய முடிவதோடு, டி-சீரிஸ் மற்றும் ஜீ மியூசிக் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து என்னால் பணியாற்ற முடிகிறது. உற்பத்தி, சேவை அல்லது சில்லறை வணிகம் போன்ற எந்த துறையாக இருந்தாலும் அதில் ஈடுபடும் தொழில்முனைவோர் பரந்த நோக்கத்துடன் கனவு கண்டு அர்ப்பணிப்புடன் அதை பின்தொடர வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792182

 

************

 


(Release ID: 1792260) Visitor Counter : 173


Read this release in: English , Urdu , Hindi , Telugu