அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சுகாதாரம்,கல்வி, எரிசக்தி, சுற்றுச்சூழல், வேளாண்மை, பாதுகாப்பு மற்றும் தொழில்துறை 4.0 நடவடிக்கைகளுக்கு புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சக்தியை அளிக்கின்றன
Posted On:
24 JAN 2022 4:31PM by PIB Chennai
கம்ப்யூட்டர் முறையிலான தேசிய திட்டம் (NM-ICPS) மூலம், நாடு முழுவதும் உள்ள 25 புத்தாக்க மையங்களில் உருவாக்கப்படும் மக்கள் பிரச்னைகளுக்கான தீர்வுகளின் உதவியுடன், தேசியளவிலான நடவடிக்கைகளுக்கு புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சக்தியை அளிக்கின்றன.
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பல தொழில்நுட்பங்கள், தொழில்நுட்ப தளங்கள் பல துறைகளுக்கு உதவுகின்றன. இதில் சுகாதாரத்துறை முக்கியமானது. கொவிட் தொற்று சமயத்தில் இதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சி மையத்தில் உள்ள ஆர்ட்பார்க், செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கியது. இது வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் மார்பாக எக்ஸ்ரே படங்களை, ஆய்வு செய்ய உதவியது. இதன் மூலம் கோவிட்-19 பரிசோதனை விரைவாக நடக்கிறது. இது எக்ஸ்ரே-இயந்திரம் இல்லாத மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கிறது. எக்ஸ்ரே சேது என்ற புதிய தொழில்நுட்பம் செல்போன் மூலம் எக்ஸரே படங்களை அனுப்ப உதவுகிறது. இதன் மூலம் ஊரக பகுதிகளில் பாதிப்புகளை உடனடியாக கண்டறிய முடிகிறது. மெஷின் லேர்னிங் நெறிமுறைகளை பயன்படுத்தி, தயார் செய்யப்படும் நோயாளியின் அறிக்கை, நுரையீரலில் சந்தேகத்திற்கிடமான பகுதிகளை காட்டுகிறது. இதன் மூலம் கொரோனா, நிமோனியா அல்லது இதர நுரையீரல் பாதிப்புகளை கண்டறிய முடிகிறது.
கோவிட்-19 பரிசோதனைக்கு ‘டேப்ஸ்ட்ரி’ என்ற முறையை மும்பை ஐஐடி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது ‘ரக்ஷக்’ என்ற முழுமையான கோவிட் பரிசோதனை முயற்சி. இது புதிய மார்பக எக்ரே அடிப்படையிலான பரிசோதனை முறை. இந்த முறையை ஜோத்பூர் ஐஐடியின் தொழில்நுட்ப புத்தாக்க மையமும் ஆதரிக்கிறது.
தடுப்பூசிகள், உணவு, பால், மற்றும் இறைச்சி ஆகியவற்றை கொண்டு செல்லும்போது அதன் வெப்பநிலையை இன்டர்நெட் மூலம் கண்காணிக்க ‘ஆம்பிடேக்’ என்ற கருவி உதவுகிறது. இதை ரோபர் ஐஐடி தொழில்நுட்ப புத்தாக்க மைய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதுவரை இதுபோன்ற கருவிகளை, இந்தியா இறக்குமதி செய்து வந்தது. இதன் உற்பத்தி விலை ரூ.400.
ஐஐடிஎம் பிரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேசன் மற்றும் 5 ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் தொடங்கப்பட்ட கூட்டமைப்பு, ஐ-ஸ்டேக்.டி.பி (இந்திய விண்வெளி தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகள் வடிவமைப்பு அலுவலகம்) என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது. இது செயற்கைகோள்கள், சென்சாரகள், 6ஜி தகவல் தொழில்நுட்பம், செயற்கைகோள் தரவு உட்பட விண்வெளி தொழில்நுட்பங்களுக்கான தற்சார்பு இந்தியா சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.
கம்ப்யூட்டர் முறையிலான தேசிய திட்டம் (NM-ICPS) சுகாதாரம், கல்வி, எரிசக்தி, சுற்றுச்சூழல், வேளாண்மை, பாதுகாப்பு மற்றும் தொழில்துறைகளில் தொழில்நுட்ப தீர்வுகளை வளர்க்கிறது. முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய ஆராய்ச்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 தொழில்நுட்ப புத்தாக்க மையங்கள் மூலம் இது அமல்படுத்தப்படுகிறது. ரூ.3,660 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. மக்கள் பிரச்னைகளுக்க தீர்வுகளை உருவாக்குவதில் அனைத்து மையங்களும் பணியாற்றுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792178
******
(Release ID: 1792244)
Visitor Counter : 214