நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கரீப் பருவத்தில் (23.01.2022 வரை) 606.19 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்.


தமிழகத்தில் 7,43,077 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் ; 1,20,231 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

प्रविष्टि तिथि: 24 JAN 2022 5:12PM by PIB Chennai

2021-22-ம் ஆண்டு கரீப் சந்தைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.

2021-22 கரீப் பருவத்தில், 23.01.2022 வரை, 606.19 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத், அசாம், அரியானா, இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட், தெலங்கானா, ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், திரிபுரா, பாகர், ஒடிசா, மகாராஷ்ட்ரா, சத்தீஷ்கர், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையில் ரூ.1,18,812.56 கோடி மதிப்பிலான நெல் கொள்முதல் மூலம்இதுவரை, 77.00 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

23.01.2022 வரை, தமிழகத்தில் இருந்து, 7,43,077 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 1,20,231 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

விரிவான தகவலுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792190

-----


(रिलीज़ आईडी: 1792224) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Malayalam , Bengali , English , Urdu , हिन्दी , Punjabi