இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய வரலாற்றின் ஒரு பகுதியைக் காண ஒவ்வொரு இந்தியரும் தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு செல்ல வேண்டும்; அன்ஷு மாலிக்

இடுகை இடப்பட்ட நாள்: 24 JAN 2022 1:33PM by PIB Chennai

உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், வரலாற்றில் தனது பெயரை பொறித்த வீராங்கனை அன்ஷு மாலிக், புதுதில்லியில் தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கு சென்று பார்த்தார் .

வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தின் தளத்தில் அமர் சக்ரா ஜோதி எரிந்து கொண்டிருக்கிறது. ‘’ தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நினைவுச் சின்னத்துக்கு வந்ததன் மூலம், நமது நாட்டின் பெருமைமிக்க போர் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. போரில் உயிர்த்தியாகம் செய்த சுமார் 26,500 வீரர்களின் பெயர்கள் தியாக செங்கற்களில் பொறிக்கப்பட்டுள்ளதைக் கண்டபோது, ஒவ்வொரு வீரரும் நாட்டின் பாதுகாப்புச்  சுவரின் வலுவான கற்கள் என்று உணர முடிந்தது’’ என்று அன்ஷு கூறியுள்ளார்.

‘’ அமர் சக்ரா அமர தீபத்தைப் போல, இந்த தியாகிகளும், அவர்களது தீரமும், ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் அணையாமல் இருக்கும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792124

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1792153) வருகையாளர் எண்ணிக்கை : 279
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Kannada