பாதுகாப்பு அமைச்சகம்

சேலா சுரங்கத் திட்டத்தில் அனைத்து அகழ்வுப் பணிகளையும் நிறைவு செய்ததைக்க குறிக்கும் இறுதி வெடிப்பை நடத்தியது எல்லை சாலைகள் அமைப்பு

Posted On: 22 JAN 2022 2:53PM by PIB Chennai

980 மீட்டர் நீளமுள்ள சேலா சுரங்கத்தில்  தகர்க்கும் பணியின் கடைசி வெடியை எல்லைச்  சாலைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி புதுதில்லியிலிருந்து இ-நிகழ்ச்சி மூலம் இன்று வெடிக்கச் செய்தார். இந்த திட்டத்தின் அகழ்வுப்பணி நிறைவடைந்ததை இது குறிக்கிறது. மோசமான வானிலைகடும் பனிப்பொழிவுக்கு இடையே எல்லைச் சாலைகள் அமைப்பு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சேலா சுரங்கச் சாலை  அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த திட்டம் நிறைவடையும் போதுதவாங்கிற்கு இணைப்பை வழங்குவதுடன்அதன் உயிர்நாடியாகவும் இருக்கும். முதலாவது சுரங்கம் 980 மீட்டர் ஒற்றை குழாய் சுரங்கமாகும். 1555 மீட்டர் நீளமுள்ள இரண்டாவது சுரங்கம்இரட்டை குழாய் அமைப்பைக் கொண்டது. அதில் ஒரு பாதையும்அவசர காலங்களில் தப்பிப்பதற்கான வழிஎன  இரண்டு சுரங்கங்கள் இருக்கும். 13,000 அடி உயரத்தில் கட்டப்படும்  நீளமான சுரங்கங்களாக இவை இருக்கும்.

சேலா திட்டத்திற்கான அடிக்கல்லை 2019-ம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டினார். 2021 ஜனவரி 15-ல் முதல் வெடிப்பு நடத்தப்பட்டு அகழ்வுப்பணி துவங்கியது. அதன்பின்னர் அக்டோபர் 14-ம்தேதி பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இரண்டாவது சுரங்கத்திற்கான பணியைத் தொடங்கி வைத்தார்.

****



(Release ID: 1791786) Visitor Counter : 240