பிரதமர் அலுவலகம்
முதலாவது இந்தியா- மத்திய ஆசியா உச்சி மாநாடு
Posted On:
19 JAN 2022 8:00PM by PIB Chennai
முதலாவது இந்தியா – மத்திய ஆசிய உச்சி மாநாட்டை பிரதமர் திரு.நரேந்திர மோடி, காணொலிக்காட்சி மூலம் ஜனவரி 27, 2022-ல் நடத்த உள்ளார். இதில், கசகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் அதிபர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையே முதல்முறையாக இதுபோன்ற கூட்டம் நடைபெறுகிறது.
இந்தியாவின் விரிவாக்கம் செய்யப்பட்ட அண்டை நாடுகளாக உள்ள மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் நல்லுறவு வளர்ந்துவருவதை முதலாவது இந்தியா- மத்திய ஆசிய உச்சி மாநாடு வெளிப்படுத்துகிறது. கடந்த 2015-ம் ஆண்டில் அனைத்து மத்திய ஆசிய நாடுகளுக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, இருதரப்பு அளவிலும், பல்முனை அமைப்புகளிலும் உயர்மட்ட பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியா- மத்திய ஆசியா இடையே வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியதைத் தொடர்ந்து, புதுதில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 18 முதல் 20-ம் தேதிவரை 3-வது கூட்டம் நடைபெற்றது. இது இந்தியா-மத்திய ஆசியா இடையேயான நல்லுறவுக்கு ஊக்கம் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக புதுதில்லியில் நவம்பர் 10, 2021-ல் நடைபெற்ற பிராந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் செயலாளர்கள் கலந்துகொண்டனர். இது ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பொதுவான பிராந்திய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.
முதலாவது இந்தியா – மத்திய ஆசிய உச்சி மாநாட்டின்போது, இந்தியா- மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாறிவரும் பிராந்தியப் பாதுகாப்பு சூழ்நிலையில், பிராந்திய மற்றும் சர்வதேச நலன்சார்ந்த விவகாரங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-மத்திய ஆசியா இடையேயான நல்லுறவை விரிவாக்கம் செய்வதற்காக இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாக இந்த உச்சி மாநாடு அமைந்துள்ளது.
*************
(Release ID: 1791634)
Visitor Counter : 181
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada