அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav g20-india-2023

ஜனவரி 29ம் தேதி நடைபெறும் வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில், 1000 டிரோன்களுடன் வானில் ஒளிக் காட்சி: மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தகவல்

Posted On: 21 JAN 2022 3:32PM by PIB Chennai

குடியரசு தின விழா கொண்டாட்டத்ததை முன்னிட்டு ஜனவரி 29ம் தேதி தில்லியில் நடைபெறும் வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில்’  அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் ஆதரவு பெட்ற ,போட்லாப் டயனாமிக்ஸ் என்ற தொடக்கநிலை நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.  .

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ்இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்பம் சிக்கலான இடங்களுக்கு தடுப்பூசி கொண்டு செல்வதில் இருந்துவீரர்கள் பாசறைக்கு திரும்பு நிகழ்ச்சியில் ராஜ பாதையை ஒளிரச் செய்வது வரைபல வெற்றிகளை கண்டுள்ளது என  டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.  சீனாரஷ்யாஇங்கிலாந்துக்கு அடுத்தபடியாகமிகப் பிரம்மாண்ட ஒளிக் கண்காட்சியில் 1000 டிரோன்களை பயன்படுத்தும் நான்காவது நாடாக இந்தியா இருக்கும் என அவர் கூறினார்.

75வது சுதந்திர ஆண்டை கொண்டாடபாதுகாப்புத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த டிரோன் ஒளி கண்காட்சியை  போட்லேப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 10 நிமிடங்கள் நடைபெறும் இந்த ஒளிக் கண்காட்சியில், 75ம் ஆண்டில் மத்திய அரசின் சாதனைகள் ஒளி வடிவமைப்புகள் மூலம் இருண்ட வானப் பின்னணியில்  காட்டப்படும்.

இகாட்சித் திட்டத்தின்  ஹார்டுவேர்சாஃப்ட்வேர்ஜிபிஎஸ்மற்றும் டிரோனின் மூளையாக செயல்படும் பிளைட் கன்ட்ரோலர் ஆகியன  உள்நாட்டிலேயே  தயாரிக்கப்பட்டவை.

இது குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் எஸ் சந்திரசேகர் கூறுகையில்,  ‘‘தொடக்க நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில்ஜனவரி 16ம் தேதியை தேசிய ஸ்டார்ட் அப் தினமாக பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டம் மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியாவின் 6ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 1000 டிரோன்களுடன் போட்லேப் டைனமிக்ஸ் நிறுவனம் நடத்தும் 3டி ஒளிக் கண்காட்சி திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்தது’’ எனத்  தெரிவித்தார். 

அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப வளர்ச்சி வாரியத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் பதக் கூறுகையில், ‘‘ டிரோன் தயாரிப்புத்  துறையை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதில் போட்லேப் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும். அம்ரித் மகோத்ஸவ நிகழ்ச்சியில் தனித்துவமான பங்களிப்பை அளிக்கும் இது போன்ற நிறுவனத்துக்கு நிதியுதவி செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்’’ என்றார்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791482

****(Release ID: 1791606) Visitor Counter : 239