உள்துறை அமைச்சகம்
திரிபுராவின் 50-வது மாநில தின விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் அமைச்சர் திரு அமித் ஷா காணொலி மூலம் உரையாற்றினார்
Posted On:
21 JAN 2022 5:43PM by PIB Chennai
திரிபுராவின் 50-வது மாநில தின விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் அமைச்சர் திரு அமித் ஷா காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.
திரிபுராவுடன், மேகாலயா மற்றும் மணிப்பூர் மக்களுக்கும் அவர்களின் மாநில தினத்தை முன்னிட்டு நான் வாழ்த்துகிறேன் என்று அவர் கூறினார். தில்லிக்கும் வடகிழக்குக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறைத்து, மனநிலையை மாற்றி, ஒட்டுமொத்த வடகிழக்கு வளர்ச்சியடைய பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் முயற்சி செய்து வருகிறார், அதனால்தான் எட்டு மாநிலங்களுக்கு அஷ்டலட்சுமி என்ற பெயரைச் சூட்டி அவற்றை மேம்படுத்த அவர் தீர்மானித்துள்ளார் என்று திரு அமித் ஷா கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திரிபுரா புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட மிக முக்கியமான மாநிலமாகும், இன்று 50 ஆண்டுகளை மாநிலம் நிறைவு செய்துள்ள நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு திரிபுரா எங்கு இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.
நாடு பிரிந்ததில் இருந்து பல சிரமங்களை திரிபுரா எதிர்கொண்டது, அந்த நேரத்தில் திரிபுராவின் மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்யா இந்திய யூனியனில் சேர முடிவு செய்தார் என்று திரு அமித் ஷா நினைவு கூர்ந்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791539
****
(Release ID: 1791575)
Visitor Counter : 205