தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இபிஎஃப்ஓ சம்பளப்பட்டியல் தரவுகள்: 2021 நவம்பரில் இபிஎஃப்ஓ மொத்தம் 13.9 லட்சம் சந்தாதாரர்களை சேர்த்துள்ளது

Posted On: 20 JAN 2022 5:11PM by PIB Chennai

2022 ஜனவரி 20 அன்று வெளியிடப்பட்ட இபிஎஃப்ஓ சம்பளப்பட்டியல் தரவுகளின்படி 2021 நவம்பர் மாதத்தில் இபிஎஃப்ஓ மொத்தம் 13.9 5 லட்சம் சந்தாதாரர்களை சேர்த்துள்ளது.

 

25.65 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் 2021 அக்டோபர் மாதத்தைவிட 2.5 லட்சம் அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது. 2020 நவம்பரில் 10.11 லட்சம் சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டிருப்பதுடன் ஒப்பிடுகையில் 2021 நவம்பர் சம்பளப்பட்டியலில் சுமார் 3.84 லட்சம் சந்தாதாரர்கள்

அதிகரித்திருப்பதையும் சம்பளப்பட்டியல் தரவுகள் காட்டுகின்றன.

 

13.9 5 லட்சம் சந்தாதாரர்களில் இபிஎஃப்ஓ சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதன்முறையாக 8.28 லட்சம் புதிய உறுப்பினர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

 

2021 நவம்பரில் வயது வாரியான பதிவுகளில் 22- 25 வயது பிரிவினர் அதிகபட்ச எண்ணிக்கையில் பதிவு செய்திருப்பதை சம்பளப்பட்டியல் தரவுகள் காட்டுகின்றன. 18-21 வயதுப் பிரிவினரும் கூட ஆரோக்கியமான அளவில் 2.81 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 2021 நவம்பரில் மொத்தக் கூடுதல் சந்தாதாரர்களில் 18-25 வயது பிரிவினரின் 46.20% பங்களிப்பு உள்ளது.

 

தமிழ் நாடு, கர்நாடகா, குஜராத், ஹரியானா, மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் இந்தக் காலத்தில் சுமார் 8.64 லட்சம் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளனர். இது அனைத்து வயதுப் பிரிவினரின் மொத்த சந்தாதாரர்களில் 60.60% ஆகும்.

 

பாலின ரீதியாக நவம்பர் மாதத்தில் பெண் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.95 லட்சமாக இருந்தது. இது அக்டோபர் மாதத்தில் கூடுதலாக சேர்ந்த சந்தாதாரர்களை விட 59,005 அதிகமாகும். இவர்களில் அமைப்பு சார்ந்த தொழில்களில் உள்ளவர்கள் 2.36 லட்சம் பேர். இது 24.9 7 சதவீதம் அதிகரிப்பாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791228

*****



(Release ID: 1791259) Visitor Counter : 234