கலாசாரத்துறை அமைச்சகம்

‘விடுதலையின் அமிர்தப் பெருவிழாவில் பொன்னான பாரதத்தை நோக்கி’ தேசிய தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி கலந்து கொண்டார்

Posted On: 20 JAN 2022 4:46PM by PIB Chennai

‘விடுதலையின் அமிர்தப் பெருவிழாவில் பொன்னான பாரதத்தை நோக்கி’ தேசிய தொடக்க விழாவில் இன்று காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்புரை வழங்கினார். 

பிரம்ம குமாரிகள் அமைப்பின் முயற்சிகளை தமது உரையில் பாராட்டிய திரு ஜி கிஷன் ரெட்டி, “பிரம்ம குமாரிகள் அமைப்பு கடந்த 88 ஆண்டுகளில் 140 நாடுகளில் மதம், கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத் துறையில் பாராட்டத்தக்க பணிகளைச் செய்துள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கு அமைதி மற்றும் ஆன்மிகத்தின் பாதையை அவர்கள் காட்டியுள்ளனர், மேலும், மக்களுக்கும் நாட்டுக்கும் அவர்கள் சேவை செய்யாத எந்தப் பகுதியும் இல்லை,” என்றார். 

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவில் தங்க பாரதத்தை நோக்கி முன்முயற்சியின் கீழ் பிரம்மகுமாரிகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகள் இந்தியாவின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் புகழ்பெற்ற கடந்த காலத்தை உலக அரங்கில் வெளிப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், நமது நாட்டிற்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு வழிகாட்டுதலை விடுதலையின் அமிர்தப் பெருவிழா வழங்கும் என்று நான் நம்புகிறேன், மேலும் நமதமரின் ‘ஐடியா 2047’ தொலைநோக்கு பார்வையை நனவாக்க அனைத்து சமூக அமைப்புகள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் அறிவுஜீவிகள் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

மத்திய, மாநில மற்றும் சர்வதேச அளவில் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் கலாசார அமைச்சகத்தின் பங்கையும் திரு கிஷன் ரெட்டி புகழ்ந்துரைத்தார். 

இன்றைக்கு “அனவருடன், அனைவரின் நலனுக்கு, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சியுடன்” எனும் தாரகமந்திரத்துடன் பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார், உலகமே இந்தியாவை புகழ்கிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். 


மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791213

******** 



(Release ID: 1791237) Visitor Counter : 165