அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அடித்தட்டு புதுமை படைப்புகள் , பாரம்பரிய அறிவு மற்றும் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் சார்ந்த பொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படவுள்ளன

Posted On: 19 JAN 2022 6:29PM by PIB Chennai

அடித்தட்டு புதுமையாளர்கள், மிகச்சிறந்த பாரம்பரிய அறிவு கொண்டவர்கள் மற்றும் மாணவர்களின்  படைப்புத்திறன் சார்ந்த புதுமையான பொருட்கள், நிஃபிஎன்ட்ரெசி (NIFientreC) மற்றும் அமேசான் இந்தியா ஆகியவற்றுக்கு இடையேயான புதிய உடன்பாட்டின்படி   பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க உள்ளன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான தேசிய புதுமைகள் மையத்தின் தொழில்நுட்ப வர்த்தக வழிகாட்டுதல் அமைப்பான நிஃபிஎன்ட்ரெசி மற்றும் அமேசான் இந்தியாவுக்கு இடையேயான இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது.

2022 ஜனவரி 16-ம் தேதியை தேசிய ஸ்டார்ட் அப் தினமாக பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்திருக்கும் நிலையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. நிஃபிஎன்ட்ரெசி செயல் இயக்குநர் பொறியாளர் ராகேஷ் மகேஸ்வரி மற்றும் அமேசான் செல்லர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் திரு சுமித் சஹாய் ஆகியோர் இதில் கையெழுத்து இட்டனர்.

இதன் மூலம் உள்ளூர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதுமையான பொருட்கள்  வர்த்தகத்தில்  உதவேகம் ஏற்பட்டு இந்தியாவின் ஸ்டார்ட் அப்  கலாச்சாரம் மேம்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791037

*************


(Release ID: 1791071) Visitor Counter : 227


Read this release in: English , Urdu , Hindi , Marathi