ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் நிர்வாகக் குழுக் கூட்டம்

Posted On: 19 JAN 2022 3:01PM by PIB Chennai

தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் 69-வது நிர்வாகக் குழுக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதிகள் மேம்பாடு & கங்கை புனரமைப்புத்துறை செயலாளர் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் 2020-21 ஆம் ஆண்டுக்கான  ஆண்டறிக்கை மற்றும் வருடாந்திர கணக்குகளுக்கு நிர்வாகக் குழுவின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் 2021-22 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் பணிகளின் முன்னேற்றம், பல்வேறு நதிகள் இணைப்புத் திட்டங்கள் தேசிய நதிகள் இணைப்பு ஆணையம் அமைப்பது, 7-வது இந்திய தண்ணீர் வாரம் மற்றும் பிரிக்ஸ் நீர்வள அமைப்புகளை ஏற்படுத்துவது மற்றும் முதலாவது பிரிக்ஸ் நீர்வள அமைச்சர்கள் மாநாட்டை நடத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மாநில அரசுகளின் முதன்மைச் செயலாளர்கள் / தலைமைப் பொறியாளர்கள், நித்தி ஆயோக், மத்திய நீர்வள ஆணையம் மற்றும் வேளாண் துறை, மத்திய நிலத்தடி நீர் வாரியம்,இந்திய வானிலை ஆய்வு மையம், போன்றவற்றின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

***************


(Release ID: 1790983) Visitor Counter : 283


Read this release in: English , Urdu , Hindi , Bengali