கலாசாரத்துறை அமைச்சகம்
வந்தே பாரதம், நாட்டிய விழா போட்டியின் வெற்றியாளர்கள் ராஜபாதையில் 2022 குடியரசு தின அணிவகுப்பில் பார்வையாளர்களைத் கவரத் தயாராகிறார்கள்
Posted On:
19 JAN 2022 11:09AM by PIB Chennai
வந்தே பாரதம், நடனப் போட்டியின் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றவர்கள் ஜனவரி 26 அன்று ராஜபாதையில் நடைபெறவுள்ள 2022-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பார்வையாளர்களைக் கவர தயாராகி வருகிறார்கள். புதுதில்லியின் ராஜபாதை மற்றும் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இந்தப் பிரமாண்டமான நிகழ்ச்சியின் ஒத்திகைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரபல நடன இயக்குநர்கள் நான்கு பேர் பயிற்சி அளித்து வருகின்றனர். இவர்களில் கதக் நடனக் கலைஞர் திருமதி ராணி கானம், திருமதி மைத்ரீ பஹாரி, திருமதி தேஜஸ்வினி சாத்தே மற்றும் திரு சந்தோஷ் நாயர் ஆகியோர் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 36 குழுக்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
நவம்பர் 17-ம் தேதி மாவட்ட அளவில் தொடங்கிய வந்தே பாரதம் நடனப் விழா போட்டியில் 323 குழுக்ளை சேர்ந்த 3,870 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றவர்கள் நவம்பர் 30, 2021 முதல் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர். மாநில அளவிலான போட்டிக்காக 2021 டிசம்பர் 4 வரை 5 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட காணொலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
மண்டல இறுதிப் போட்டிகள் கொல்கத்தா, மும்பை, பெங்களூரு மற்றும் தில்லியில் டிசம்பர் 9 முதல் 12 வரை நடைபெற்றன, இதில் 104 குழுக்கள் நடுவர்களின் முன் தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்தினர்.
சிறந்த 480 நடனக் கலைஞர்கள் இறுதி சுற்றில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர், 26 ஜனவரி 2022 அன்று புது தில்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் அவர்கள் நடனமாடுவார்கள்.
மக்கள் பங்கேற்பை மேம்படுத்தும் நோக்கில் அகில இந்திய நடனப் போட்டியின் மூலம் ராஜ்பாதையில் குடியரசு தின நிகழ்ச்சிக்காக அணிகள் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790860
*********
(Release ID: 1790977)
Visitor Counter : 227