மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கூட்டுறவுகளுக்கான சர்வதேச சிறந்த நடைமுறைகள் குறித்த கையேடு வெளியீடு
Posted On:
18 JAN 2022 5:23PM by PIB Chennai
கூட்டுறவுகளுக்கான சர்வதேச சிறந்த நடைமுறைகள் குறித்த கையேட்டை சர்வதேச கூட்டுறவு கூட்டணி ஆசிய மற்றும் பசிபிக் தலைவர் டாக்டர். சந்திர பால் சிங் யாதவ் மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு சங்கத்தின் தலைவர் திரு. திலிப் சங்கானியோன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர் .
லக்ஷ்மன்ராவ் இனாம்தார் தேசிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அகாடமி ஏற்பாடு செய்த கூட்டுறவு அமைப்புகளுக்கான சிறந்த நடைமுறைகள் குறித்த சர்வதேச ஆய்வுக் கூட்டத்தின் வெளிப்பாடுகளின் அடிப்படையில் இந்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கூட்டுறவு அமைப்புக்கள் புதுமைகளை புகுத்தி மற்றும் சிறந்த நடைமுறைகளை செயல்படுத்தி போட்டித்தன்மை மிக்க மற்றும் வெற்றிகரமான வர்த்தக அமைப்புகளாக விளங்குவதற்கு இந்த கையேடு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த கையேட்டின் வெளியீட்டு விழாவில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் திரு. சந்தீப் நாயக் மற்றும் சஹகார் பாரதி தேசிய தலைவர் திரு. டி. எம். தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு .யாதவ், ஏழ்மை ஒழிப்பு, உணவு, பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதில் கூட்டுறவு அமைப்புக்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும் தற்சார்பு நோக்கிய வழியை இவை காட்டுவதாகவும் கூறினார். கொரோனா காலகட்டத்தில் இவை பிரதிபலிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். கூட்டுறவு அமைப்புக்களுக்கு இந்த கையேடு வழிகாட்டியாக அமைந்து தற்சார்பு மிக்க இந்தியாவை கட்டமைப்பதற்கு பங்களிக்க உதவும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
வழிகாட்டுதல்கள், வளங்கள், செயல்முறைகள், முக்கிய கற்றல்கள், மற்றும் இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள கூட்டுறவு அமைப்புக்களின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை இந்த கையேடு கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790731
*********
(Release ID: 1790802)
Visitor Counter : 222