தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நியூஸ்ஆன்ஏர் வானொலி நேரலையின் உலகளாவிய தரவரிசை

Posted On: 18 JAN 2022 3:31PM by PIB Chennai

நியூஸ்ஆன்ஏர் வானொலி நேரலையின் உலகளாவிய தரவரிசையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் கூடுதலாக 18 முதல் 44 வயதிற்குட்பட்ட நேயர்கள் (இந்தியா நீங்கலாக) இருப்பது தெரிய வந்துள்ளது. நியூஸ்ஆன்ஏர்  செயலி உலகில் இளைஞர்களிடையே மாபெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளது.

அகில இந்திய வானொலியில் நேரலை நிகழ்வுகளில் மிகவும் பிரபலமான நியூஸ்ஆன்ஏர் செயலி தொடர்பான சமீபத்திய தரவரிசையில் (இந்தியா நீங்கலாக) உலகின் முதல் 10 நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் முதன் முறையாக நுழைந்துள்ளது. பப்புவா நியூகினியா வெளியேறி உள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக அரை மாத (15 நாள்) நேயர் கணிப்பில் ஃபிஜி முன்னிலையில் உள்ளது.

அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பில் உலகளவில் (இந்தியா நீங்கலாக) ஏஐஆர் தர்மசாலா முதல் 10 இடங்களில் ஒன்றாக புதிதாக நுழைந்துள்ளது. ஆஸ்மிதா மும்பை, ஏஐஆர் தெலுங்கு, ஏஐஆர் சென்னை ரெயின்போ ஆகியவற்றை முதன்மை பட்டியலிலிருந்து விலக்கி ஏஐஆர் மாஞ்சேரி, எஃப்எம் கோல்டு மும்பை ஆகியவை மீண்டும் இடம் பெற்றுள்ளன.

அகில இந்திய வானொலியின் 240-க்கும் அதிகமான வானொலி சேவைகள் நியூஸ்ஆன்ஏர் செயலி, பிரசார் பாரதியின் அதிகாரபூர்வ செயலி ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பாகின்றன. நியூஸ்ஆன்ஏர் செயலியின் நேரலைக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் 85-க்கும் அதிகமான நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான நேயர்கள் இருக்கின்றனர்.

2021 டிசம்பர் 16 முதல் 31 வரையிலான தரவுகள் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கும் தரவரிசைகள்

வயது வாரியாக நேயர்கள் சதவீதம் – 18-14, 37%, 45-54, 20%, 55-64, 22%, 65 அதற்கும் கூடுதலாக 21%.

உலகளவில் நியூஸ்ஆன்ஏர் சேவைகளின் முதல் 10 இடத்தில் தில்லி எஃப்எம் கோல்டு முதலிடத்தில் உள்ள நிலையில், ஏஐஆர் தமிழ் 7-வது இடத்தில் உள்ளது.

நியூஸ்ஆன்ஏர் நேரடி ஒலிபரப்பில் முதல் 10 இடங்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஃபிஜி முதலாவதாக உள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா 2-வது, 3-வது இடங்களை பெற்றுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் 10-வது இடத்தில் உள்ளது.

இந்த நாடுகளில் முதல் 10 இடங்களை பெற்றுள்ள வானொலி நிகழ்ச்சிகளில் ஏஐஆர் சென்னை, ஆஸ்திரேலியாவில் 7-வது இடத்தைப் பெற்றுள்ளது. ஏஐஆர் தமிழ், அமெரிக்காவில் 4-வது இடத்தில் உள்ளது. ஏஐஆர் தமிழ் ஒலிபரப்பில் அமெரிக்கா முதல் இடத்திலும், சிங்கப்பூர் 5-வது இடத்திலும், இலங்கை 7-வது இடத்திலும், மலேசியா 8-வது இடத்திலும் உள்ளன.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790699

 

*****



(Release ID: 1790728) Visitor Counter : 228