பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

நல்லாட்சிக்கான தேசிய மையம், இந்திய அரசு மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிறுவனம், ஹைதராபாத் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Posted On: 18 JAN 2022 2:18PM by PIB Chennai

அனைத்தையும் உள்ளடக்கிய நல்லாளுகை, உள்ளாட்சி அமைப்புக்களை வலுப்படுத்துதல் மற்றும் அரசு திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, தேசிய நல்லாட்சி மையம், இந்திய அரசு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிறுவனம்  ஆகியவை 17 ஜனவரி 2022 திங்கட்கிழமை அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

சிறந்த நல்லாட்சி செயல்முறைகளை அனைத்து திட்டங்களில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக இந்த இரண்டு தேசிய நிறுவனங்களின் திறன்களின் மூலம் வெவ்வேறு கூட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

பஞ்சாயத்துராஜ் நிறுவனங்கள் உட்பட அரசின் அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகளின் அறிவுத்திறனை பரிமாறிக்கொள்வதற்கும் திறனை மேம்படுத்துவதற்கும் இரு நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளன. 

நல்லாளுகைக் கொள்கைகளை அவற்றின் உண்மையான உணர்வில் செயல்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புற சமூகங்களுக்குப் பயனளிக்கும் வகையில் சேவைகளை வழங்கும் நோக்கத்தில் பொது நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வின் அடிப்படையில் அவற்றை திறம்பட செயல்படுத்துவதை புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதி செய்யும்.

பஞ்சாயத்து அளவில் மின்-ஆளுமையை மேம்படுத்துதல், பஞ்சாயத்து அளவில் நல்ல நிர்வாக மாதிரிகளை ஆவணப்படுத்துதல், படிவங்கள் உள்ளிட்டவற்றை எளிமைப்படுத்துதல் மற்றும் கிராமப்புற நிர்வாகத்தின் சிறந்த நடைமுறைகள் உட்பட பல முக்கிய பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையின் செயலர் திரு. வி. ஸ்ரீனிவாஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர். ஜி. நரேந்திர குமார் ஆகியோர் காணொலி மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790680

******



(Release ID: 1790707) Visitor Counter : 313