பாதுகாப்பு அமைச்சகம்
ரஷ்ய கடற்படையுடன் இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சி
प्रविष्टि तिथि:
16 JAN 2022 1:23PM by PIB Chennai
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பலான ஐஎன்எஸ் கொச்சி, ரஷ்ய கூட்டமைப்பு கடற்படையின் ஆர்எஃப்எஸ் அட்மிரல் டிரிபூட்ஸ் உடன் 14 ஜனவரி 2022 அன்று அரபிக் கடலில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது.
இரு கடற்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் இயங்குதன்மையை இப்பயிற்சி வெளிப்படுத்தியது. யுக்தி சார்ந்த நடவடிக்கைகள், குறுக்கு-தள ஹெலிகாப்டர் செயல்பாடுகள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் ஆகியவற்றை இது உள்ளடக்கியது ஆகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790311
****
(रिलीज़ आईडी: 1790326)
आगंतुक पटल : 323