கலாசாரத்துறை அமைச்சகம்

உத்தரப் பிரதேசம் கோயிலிருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட, 10ம் நூற்றாண்டு சிலை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது: மத்திய அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி தகவல்

Posted On: 15 JAN 2022 4:43PM by PIB Chennai

உத்தரப் பிரதேசம் பாண்டா மாவட்டத்தின்  லோக்ஹரி என்ற கிராமத்தில் உள்ள கோயிலில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட ‘யோகினி’ என்ற ஆட்டுத் தலையுடன்  கூடிய சிலை, இந்தியாவிடம் திருப்ப ஒப்படைக்கப்படுவதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த சிலை 10ம் நூற்றாண்டை சேர்ந்தது.

இத்தகவலை டிவிட்டரில் தெரிவித்த மத்திய அமைச்சர், இந்தியாவுக்கு உரிமையான கலைப்பொருட்கள் திரும்ப வருவது தொடர்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இத்தகவலை லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது.

இந்த சிலை கடந்த 1980ம் ஆண்டுகளில், உத்தரப் பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யோகினி’ என்ற ஆட்டுத்தலையுடன் கூடிய இந்த சிற்பம் லோக்ஹரி கிராமத்தில் உள்ள கோயிலைச் சேர்ந்தது.

இந்த சிலை கடத்தப்பட்டுலண்டனில் உள்ள ஒரு கலை அரங்கில் கடந்த 1988ம் ஆண்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. இதை மீட்கும் முயற்சியில் இந்திய தூதரகம் இறங்கியது.

இதையடுத்து, மகர சங்கராந்தி தினத்தில், யோகினி சிலையை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை வந்தடைந்தது.  இது புது தில்லியில் உள்ள இந்திய தொல்லியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790145

                                                                                                **********************

 



(Release ID: 1790235) Visitor Counter : 166