மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

‘தேர்வு குறித்த கலந்தாய்வு 2022’ நிகழ்ச்சியில் அதிகளவில் பங்கேற்க வேண்டும்: மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அழைப்பு

Posted On: 13 JAN 2022 6:23PM by PIB Chennai

ஐந்தாவது முறையாக நடைபெறும் ‘பரிக்ஷா  பே சர்ச்சா’ என்ற ‘தேர்வு குறித்து கலந்தாய்வு 2022’  நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிகளவில் பங்கேற்று பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலை பெறும் வாய்ப்பை பெற வேண்டும் என மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி பிரதமர் திரு நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்டது. தேர்வுக்கான கலந்தாய்வு நிகழ்ச்சியில், இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் பிரதமருடன் கலந்துரையாடி தேர்வு பயத்திலிருந்து வெளிவருகின்றனர். வாழ்க்கையை ஒரு விழாவாக கொண்டாடுவதே இதன் நோக்கம். இந்நிகழ்ச்சியை, மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை கடந்த 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

 

கடந்தாண்டை போல் இந்நிகழ்ச்சி ஆன்லைன் மூலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் எழுத்துத் தேர்வு https://innovateindia.mygov.in/ppc-2022/  என்ற இணையதளத்தில் பல தலைப்புகளில் கடந்த டிசம்பர் 28ம் தேதி முதல் 2022 ஜனவரி 20ம் தேதி வரை நடத்தப்படுகிறது.  தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்களின் கேள்விகள், தேர்வு குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் இடம் பெறும்.

9 வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆன்லைன் போட்டி மூலம் தேர்வு செய்யப்படுவர். இதற்கான பதிவுகள் https://innovateindia.mygov.in/ppc-2022/  என்ற இணையளத்தில் கடந்த டிசம்பர் 28ம் தேதி முதல், 2022 ஜனவரி 20ம் தேதி வரை கீழ்கண்ட பல கருப்பொருள்களில்  நடக்கிறது: .

 

 

* மாணவர்களக்கான கருப்பொருட்கள்:

கொவிட்-19 காலத்தில் தேர்வு அழுத்த மேலாண்மை யுக்திகள்

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம்

தற்சார்பு இந்தியாவுக்கு தற்சார்பு பள்ளி

சுத்தமான இந்தியா, பசுமை இந்தியா

வகுப்பறைகளில் டிஜிட்டல் ஒத்துழைப்பு

சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்ற மீட்பு

* ஆசிரியர்களுக்கான கருப்பொருட்கள்:

a . புதிய இந்தியாவுக்கான தேசிய கல்வி கொள்கை

b. கொவிட்-19 பெருந்தொற்று: வாய்ப்புகளும் & சவால்களும்

 

 

பெற்றோர்களுக்கான கருப்பொருட்கள்:

 

பெண்குழந்தைகளை படிக்க வைப்போம், நாட்டை வளர்ப்போம்

உள்ளூர் முதல் உலகநாடுகள் வரை - உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம்.

வாழ்நாள் முழுவதும், கற்றலுக்கான மாணவர்களின் விருப்பம்

 

மைகவ் இணையளத்தில் போட்டி மூலம் தேர்வு செய்யப்படும் சுமார் 2050 பேருக்கு, என்சிஇஆர்டி இயக்குனரின் பாராட்டு சான்றிதழ் மற்றும் பிரதமர் எழுதிய ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகம்  அடங்கிய தேர்வு குறித்த ஆலோசனைக்கான சிறப்பு பரிசு வழங்கப்படம்.  இதில் நாடு முழுவதும் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகமாக பங்கேற்று வருகின்றனர்.

                                ************



(Release ID: 1789788) Visitor Counter : 133