கலாசாரத்துறை அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் கீழ் பைக் பயண திட்டம்: மத்திய அமைச்சர் திருமதி. மீனாட்சி லெகி தொடங்கி வைத்தார்.

Posted On: 13 JAN 2022 3:48PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் கீழ் பைக் பயண திட்டத்தை மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி .மீனாட்சி லெகி புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை கலாச்சார துறை அமைச்சகமும், வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரத்தை முன்னேற்றும் ‘அமேசிங் நமஸ்தே அறக்கட்டளையும்’ இணைந்து நடத்துகின்றன .

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை முன்னிட்டு வடகிழக்கு மாநில பைக் பயணம் 2022 ஏப்ரல் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது.   நாடு முழுவதிலும் இருந்து  75 பைக் ஓட்டிகள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் 6 குழுக்களாக சுமார் 9000 கி.மீ பயணம் செய்யவுள்ளனர்.  இந்த பயணம் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின்" எனது தேசத்தை பார்" என்ற நிகழ்ச்சியை ஊக்குவிக்கும். சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்த தகவலையும் இந்த பைக் ஓட்டிகள் பரப்ப உள்ளனர்.

 

இந்த பைக் பயண திட்ட தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மீனாட்சி லெகி கூறியதாவது:

வேற்றுமையில் ஒற்றுமையுடன்  திகழும் வடகிழக்கு மாநிலங்கள் வெளிக்காட்டப்பட வேண்டும். இந்த 8 மாநிலங்களில்  166 வகையான பழங்குடியினர் மற்றும் பாரம்பரியங்கள் உள்ளன. நாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்த மக்கள். நாம் வேற்றுமையை கொண்டாடுகிறோம். நாட்டில் உள்ள அனைத்து நல்ல விஷயங்களையும் கொண்டாடும் நிகழ்வுதான் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம். இந்த கொண்டாட்டங்களுக்கு  உலகளாவிய அங்கீகாரம் தேவை.

வடகிழக்கு மாநிலங்கள் தென் கிழக்கு ஆசியாவின் நுழைவுப் பகுதி. அதனை தயார்படுத்த வேண்டியது அவசியம்.. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், இத்திட்டத்தை முன்னெடுத்து செல்லும் 75 வாகன ஓட்டிகளுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு மீனாட்சி லெகி கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789643

                                                                                ***************************

 



(Release ID: 1789774) Visitor Counter : 258